Oct 15, 2009

Ghazal

All right ! This post is not about Raaja. But nonetheless its about Music and I thought its worth sharing with the readers of this blog. My second article in Tamil is published and its about the Ghazal maestros from Pakistan - Mehdi Hassan and Ghulam Ali. Although I do listen to a lot of Ghazal including those of Indian stalwarts Jagjit Singh, Anup Jalota, Hariharan etc., I particularly find the Ghazals of these two Pakistani legends to be a bit more meatier(Musically). I have also been doing a small time research on Ghazal, its history, grammar and some popular compositions. So this article is a culmination of all such efforts over the past few years.

You can read it here.

With Love
Vicky

PS: Its in Tamil. So apologies for non-Tamil readers. I will try to translate it soon and post it either here or in my general blog.

15 comments:

  1. விக்கி..

    இசை குறித்த பதிவுகளை மேய்ந்துகொண்டிருக்கையில் சில நாட்களுக்கு முன் தான் உங்கள் எழுத்துக்கு அறிமுகமானேன். இசையில் மட்டுமல்லாது (தமிழ், ஆங்கில) மொழிநடையிலும் அருமையான தேர்ச்சியைப் பெற்றுள்ளீர்கள்.

    கஸல் குறித்த சொல்வனப் பதிவு எனக்கு ஒரு நல்ல அறிமுகத்தை அளித்திருக்கிறது. இளையராஜாவின் இசை குறித்த உங்கள் முந்தைய பதிவுகள் என்னைப் பெரும் வியப்பிலாழ்த்தி புதிய பார்வைகளை அளித்திருக்கின்றன.

    மேலைச் செவ்விசைப் படைப்பாளிகள் குறித்து நீங்கள் ஏதேனும் பதிந்திருக்கிறீர்களா? யாஹூ செவ்விசை அரட்டைக்கூடங்களுக்கு (Classical Music Rooms) வந்திருக்கிறீர்களா?

    நன்றி!

    செழியன்
    nunnokki@gmail.com

    ReplyDelete
  2. செழியன் அவர்களுக்கு:

    தங்கள் வருகைக்கும் ஊக்கமானதொரு பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. ஆங்கிலத்தில் ஏறக்குறைய ஒரு ஏழெட்டு வருடமாய் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன் (பெரிதாக ஒன்றும் இல்லை. ஏதோ எனது சொந்த வலைப் பதிவுகள் மட்டும், மற்றும் இளையராஜா யாஹூ குழுமத்திலும், தற்ப்போது ஓர்குட்டிலும் ). தமிழில் பெரிதாக ஒன்றும் இதுவரை எழுதவில்லை. பள்ளிப் படிப்பின்போது தமிழ் மிகவும் பிடித்த ஒரு பாடம்.. அதற்க்கு பின்னால் தமிழில் இப்போதுதான் ஒரு இரண்டு மாதங்களாக எழுத ஆரம்பித்துள்ளேன்.. (அதுவும் இதுவரை எழுதியது சொல்வனத்தில் வந்த அந்த இரண்டு கட்டுரைகள் மட்டுமே !!)

    மேலைச் செவ்விசை நிறையவே கேட்பதுண்டு. (இங்கே ஆடி தள்ளுபடி போல் விற்பனையில் மலிவு விலையில் வந்த போது) பாக், பீத்தோவன், மோஸார்ட், ஹாண்டல், வெர்டி, ஸ்ட்ராஸ், ட்சகொவ்ச்கி, விவால்டி, ட்வோரக் போன்ற படைப்பாளிகளின் மொத்த படைப்புகளையும் குறுந்தகடுகளாக சேர்த்து வைத்துள்ளேன். இவர்களில் சாப்பின் என்னை மிகவும் கவர்ந்த ஒரு படைப்பாளி. ஆனால் அவர்களை பற்றி இதுவரை எதுவும் முறையாக எழுதவில்லை. இங்கே மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது சிம்பொனி ஆர்கெஸ்ட்ராக்களை நேரில் சென்று கேட்பது வழக்கம். அத்தோடு சரி. யாஹூ செவ்விசை அரட்டைக்கூடங்கள் பற்றி இதுவரை கேள்விப் பட்டதில்லை. சுட்டியை தந்தீர்களானால் கண்டிப்பாக எட்டிப் பார்க்கிறேன் (பார்வையளனாகவாவது..!)

    ஒரு சந்தேகம்: கணையாழி என்ற வலைப்பத்திரிக்கையில் இளையராஜாவைப் பற்றி "அங்கீகரிப்பதால் புறக்கணிக்கப்படும் கலைஞன்" என்ற தலைப்பில் எழுதிய செழியன் நீங்கள் தானா ..?

    அன்புடன்
    விக்கி

    ReplyDelete
  3. அன்புள்ள விக்கி..

    ஏறத்தாழ பதினேழாண்டுகளுக்கு முன் ஒரு மாலையில் என் தோழரின் இல்லத்தில் அமர்ந்திருந்தேன். தோழர் அன்பானவர். இசையில் பேரார்வமுடையவர். பேசிக்கொண்டிருக்கையில் சட்டென்று ஓர் ஒலிநாடாவை ஒலிப்பித்தார். என் செவிகள் பழகியிராத ஒரு புதுவகை இசை அறையின் அமைதியான வெளியில் மிதந்துவரத் தொடங்கியது. மகிழ்ச்சியும் கும்மாளமும் கொண்டாட்டமுமாய், துயரமும் புலம்பலும் அழுகையுமாய் பல்வேறு கருவிகளின் சிக்கலான, மனத்தையள்ளும் சேர்ந்திசைப்பில் வழிந்தோடிய உணர்ச்சிகளில் சிக்குண்டு மனம் விம்மியது. கண்ணீர் பெருகியது. தேநீரை உறிஞ்சியவாறு தோழர் என்னைச் சலனமின்றிப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒலிநாடாப் பேழையின் முன்னட்டையில் ஆடவரும் பெண்டிருமாய் இசையரங்குக்குச் செல்லும் ஓர் எளிய, அழகிய பதினேழாம் நூற்றாண்டைய ஐரோப்பிய ஓவியக்காட்சி. ஓவியத்தின் கீழ் சில வரிகள். ஜோஹன் செபாஸ்டியன் பாஹ் (1685-1750), ப்ராண்டன்பர்க் கன்செர்டோஸ் 1-6.

    அடுத்த சில நாட்களில் லுத்விக் வான் பீத்தோவனையும் ஒரு வெண்ணிற ஒலிநாடாவில் தோழர் எனக்கு அறிமுகப்படுத்தினார். ஒப்பற்ற மேலைச் செவ்விசைப் படைப்புகளில் ஒன்றாக இன்றளவும் நான் கருதும் பீத்தோவனின் ட்ரிபில் கன்செர்டோ, அது! பியானோ, வயலின், செல்லோ ஆகியவற்றுக்கான ஓர் உச்சகட்ட (துயரப்) படைப்பாக அதை நான் எண்ணுகிறேன். என் சொந்தத் துயரங்களை எண்ணற்ற இரவுகளில் அதனோடு பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.

    இசைக்கும் எனக்குமான உறவு இன்றுவரை முழுக்க முழுக்க ஓர் உணர்வார்ந்த பிணைப்பாகவே இருந்துகொண்டுவந்திருக்கிறது. இதன் நேர்ப்பொருள், நான் செவ்விசையை, அதன் உட்கூறுகளை, வரையறைகளை, இலக்கணத்தை இன்னும் ஆழமாக அறியத்தொடங்கியிருக்கவில்லை. பாஹ்கின் ப்ராண்டன்பர்க் கன்செர்டோக்களையும் பீத்தோவனின் ட்ரிபில் கன்செர்டோவையும் மட்டுமே கேட்டறிந்த எனக்கு யாஹூ செவ்விசைக்கூடங்கள், கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக, கடலில் மறைந்துகிடந்த மாபெரும் மலைத்தொடரைப் புரியவைத்திருக்கின்றன. எண்ணற்ற படைப்புகளையும் அவற்றை ஆக்கிய மலைப்புக்குரிய மேதைகளையும் அவை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றன. உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து நல்ல நண்பர்களின் நட்பையும் பெற்றுத்தந்திருக்கின்றன. (ஆம்ஸ்டர்டாமிலிருந்து பல இசைஞர்கள்! அருமையான நண்பர்கள்!!)

    உங்கள் தன்னடக்கம் எனக்குப் புரிகிறது, விக்கி! ஆனால், என் தரப்பு உண்மையைச் சொல்லத்தானே வேண்டும். நான் படித்த அருமையான ஆங்கில உரைநடைகளில் உங்களுடையதும் ஒன்று என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை. உங்கள் தமிழ்நடையும் அருமையே. நடையினும் முதன்மையானது உங்கள் ஆய்வுமுறை. ஓராண்டுக்குமுன், லக்‌ஷ்மி நாராயணன் (?) என்ற அமெரிக்கவாழ் மருத்துவர் ஒருவர் ராஜாவின் இசைபற்றி எழுதிய தொடர்கட்டுரைகளை ஏதோ ஒரு வலைமனையில் படித்தேன். நிரம்பப் புரியாவிட்டாலும், அவருடைய ஆய்வுநோக்கு எனக்குப் பிடித்திருந்தது. உங்கள் பதிவுகளோ இதுவரை நான் ராஜாவைக் குறித்துப் படித்த எல்லாவற்றிலும் மிகச்சிறந்தவை. மிக நம்பகமானவை. உங்கள் பதிவுகளைப் பற்றி, ஆங்கிலத்தைச் சரளமாகப் படித்துப் புரிந்துகொள்ளமுடியாத என் இசைநண்பர் கண்ணனிடம் சொன்னபோது தமிழில் இல்லாததற்காக அவர் மிகவும் வருந்தினார். உங்கள் ஞானத்தைத் தமிழுக்கும் கொண்டுவாருங்கள், விக்கி!

    நீங்கள் ஷாஜியைப் http://www.shajiwriter.blogspot.com/ படிப்பதுண்டா? நான், நீங்கள் குறிப்பிட்டுள்ள கணையாழி செழியன் அல்லன். இசையென்னும் பெருங்கடலின் முன்நின்று பெருவியப்போடு அதை உற்றுப்பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்கிற ஒரு சாதாரண செழியன்!

    அன்புடன்

    செழியன்

    ReplyDelete
  4. Dear Vicky..

    To join the Yahoo Classical Music Room through Yahoo Messenger..

    1. Log on using your Username and Password..

    2. Messenger(menu) > Yahoo! Chat > Join a Room..

    3. In the Join Room window, select 'Music' under Categories..

    4. Expand 'Classical' under Yahoo! Rooms and select 'Classical:1'..

    5. Click on the 'Go to Room' button..

    Regards..

    Chezhiyan

    ReplyDelete
  5. Dear Vicky..

    My Yahoo ID is Chezhiyan1989

    Would you add me?

    Thanks!

    With love..
    Chezhiyan

    ReplyDelete
  6. யாஹூ இசைக்கூடங்களுக்கு அறிமுகமாவதற்கு முன்னரே, என் நண்பனும் என் தங்கையும் ஐரோப்பாவிலிருந்து கொணர்ந்த ஏராளமான செவ்விசைப் படைப்புகள் ஒரு பரந்த, சற்றே ஆழ்ந்த அறிமுகத்தை எனக்களித்திருந்ததை என் முந்தைய பதிவில் குறிப்பிட மறந்துவிட்டேன். மறதி என் சிக்கல்!

    அன்புடன்
    செழியன்

    ReplyDelete
  7. சாபின் என் மனத்துக்கும் நெருக்கமானவர். ரோமன் போலன்ஸ்கியின் பியானிஸ்ட் படத்தில் ஜெர்மன் நாஜி அதிகாரியின் கட்டளைக்கிணங்க ஷ்பில்மான் பியானோவில் இசைக்கிற அந்தக் காட்சிதான் சாபினை எனக்கு அறிமுகப்படுத்தியது. மனத்தை நெகிழ்த்திப் பிசைகிற அந்த இசைத்துண்டு சாபினுடைய பாலட் என்பதைப் பின்னாளில் பால்டாக் (PalTalk) இசைக்கூடத்தில் ஒரு ஜப்பானியப் பியானோ இசைஞர் சொல்லக்கேட்டு அவரின் படைப்புகளைத் தேடிப்பிடித்துக் கேட்கத்தொடங்கினேன்.
    http://www.classiccat.net/ , http://pianosociety.com/cms/index.php?section=1 ஆகியன பயனுள்ள தளங்கள்.

    த்வோரக்கை நெடுநாட்களாக அவரது அற்புதமான வயலின் கன்செர்டோ மூலமாக மட்டுமே அறிந்துவைத்திருந்தேன். அண்மையில் அவரது பெரும்பான்மையான படைப்புகள் கிடைக்கப்பெற்றதன் வாயிலாக தனித்துவமும் படைப்பூக்கமும் செறிந்த அந்த ரொமாண்டிக் இசைமேதையை சற்றே நெருங்கியிருக்கிறேன். அதிலும் அந்த செல்லோ கன்செர்டோ, ஓபஸ் 104!!!

    எனக்கு இசையின் அமைப்பு-இலக்கணம் பற்றி ஆழ்ந்த அறிவேதுமில்லை. இசை எழுப்புகிற உணர்வலைகளிலேயே மிதந்துகொண்டிருந்ததால் இலக்கணத்தைக் கற்றுகொள்ள ஆர்வமாய் நான் முயன்றதில்லை. த்வோரக்கின் படைப்புகள் என்னுள் இசையின் கட்டமைப்பை அறிதலைக் குறித்த ஆர்வத்தழலை மூட்டியிருக்கின்றன. ஆர்வமென்று வந்துவிட்டால் உடனே பத்துப் பதினைந்து நூல்களைத் தேடிப்பிடித்து மூட்டைகட்டிக்கொண்டு பந்தாவாகப் படிக்கஅமர்ந்து பத்துப்பக்கம் தாண்டுவதற்குள் பொறிகலங்கிப் பிடரியில் கால்பட ஓடிவிடும் தமாஷ்களை நான் விரும்புவதில்லையாதலின் இப்போதைக்கு இதில் http://www.archive.org/details/philosophymusic00polegoog மட்டுமே கவனம்செலுத்திப் படித்துக்கொண்டிருக்கிறேன். அருமையான அறிமுக நூலாக எனக்குத் தோன்றுகிறது, விக்கி!

    அன்புடன்
    செழியன்

    ReplyDelete
  8. த்வோரக்கின் ஒன்பதாவது சிம்ஃபொனியின் மூன்றாவது மூவ்மெண்டைக் (A.L.Dvorak, Symphony No.9 in E minor, Op.95, 'From the New World', 3.Scherzo, molto vivace) கவனித்தீர்களா, விக்கி? ராஜா தன் ‘சிட்டுக்குருவி வெட்கப்படுது’ என்ற பாடலை த்வோரக்கின் இந்தத் துண்டிலிருந்து கமுக்கமாகக் காப்பி அடித்துவிட்டதாக ராஜலக்‌ஷ்மி என்ற இசை விமர்சகர் முன்பு குற்றஞ்சாட்டியிருந்தார். எனக்கு அது ஏற்புடையதாகத் தோன்றவில்லை!

    அன்புடன்
    செழியன்

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. அன்புள்ள செழியன் அவர்களுக்கு:
    தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். சற்றே வேலையாக இருந்து விட்டேன். உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் இதோ கீழே என் மறுமொழிகள்.

    மேற்க்கத்திய செவ்வியலுக்கு நீங்கள் அறிமுகமான நினைவுகளை மிக உணர்ச்சி பூர்வமாக என் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். மிக்க நன்றி.

    ஷாஜியைப் பற்றி இதுவரை கேள்வி பட்டதில்லை. அவரின் வலைப்பூவை கொஞ்சம் எட்டிப் பார்த்தேன். இலக்கியப் பார்வையில் அவரின் எழுத்து என்னை கவர்வது என்னமோ உண்மை தான். ஆனால் இசையைப் பற்றி அவர் உள்ளார்ந்த ஆய்வையோ அல்லது அவர் கூறும் பாடல்/ படைப்புக்களின் இசை சார்ந்த கட்டமைப்புகளையோ முன் வைக்கவில்லை. அல்லது அவ்வாறு எனக்கு படவில்லை. ஆகையால் அதை இசை பதிவுகள் என சொல்வதை விட இசையை பற்றி மேலோட்டமாய் எழுதப்பட்ட ஒரு இலக்கிய படைப்புக்கள் எனலாம் என்பது என் தாழ்வான கருத்து. ஆயினும் ரொம்ப நல்ல தரமான வலைப்பூ. நன்றி

    யாஹூ செவ்விசை கூடத்திற்கான சுட்டி-க்கு நன்றி. விரைவில் உங்கள் மின்னஞ்சலையும் நான் எனது பட்டியலில் சேர்த்து கொள்கிறேன். செவ்விசை குறித்தான மற்ற இணையதளங்களை பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி. இவ்விரு தளங்களுக்கு சென்று பார்த்தேன். கற்றுக் கொள்ள நெறைய இருப்பது மட்டும் தெரிகிறது.

    'சிட்டுக் குருவி' பாடல் ட்வோரக்-கின் 9-வது சிம்பொனியின் மூன்றாவது பாகத்தை ஒட்டி இருப்பது என்னமோ உண்மைதான். ஆனால் "சிட்டுக் குருவி வெட்க்கப் படுது.. பெட்டை குருவி.. கத்துத் தருது " எனும் இரு வரிகளுடன் அந்த ஒற்றுமை நீங்கி விடுகிறது. அதிலும் இவ்விரு படைப்புக்களின் (எடுப்பு எனப்படும்) துடக்க இடம் வேறாகும். ட்வோரக்-கின் சிம்பொனி சமத்தில் தொடங்குகிறது. இளையராஜாவோ 'சிட்டுக் குருவி' -யை அதீத எடுப்பிலேயே பறக்க விட்டு விடுகிறார். மேலும் இளையராஜாவின் பாடலில் தொடக்க இசை, இடை இசை, சரணம் என எல்லா பாகங்களும் முற்றிலும் சுயமானதே. ஆக, இது ட்வோரக்-கிற்கு இளையராஜா அளித்த அபிமான மரியாதை என்றே எனக்கு படுகிறது.

    சங்கர் - ஜைகிஷன் பேரில் இளையராஜா வைத்திருக்கும் அபிமானத்தை எனது அடுத்த பதிப்பாக இப்போது தான் பதிந்தேன். அதே போல..

    அன்புடன்
    விக்கி

    ReplyDelete
  11. How do you guys write in Tamil? Oh my god, Enna pure language ? Chance ae illai, Vicky.

    ReplyDelete
  12. விக்கி..

    நன்றி!

    ஷாஜியைப் பற்றிய உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடே. இசையில் அவருடைய எழுத்தின் புழங்குதளம் வேறு.

    அன்புடன்
    செழியன்

    ReplyDelete
  13. Vicky,

    I have always wondered about the song "Thenrale Nee Pesu" sung by P.B.Srinivas, if it was a Ghazal.

    The interludes in this song, though simple (raaja was honing his skills back then) is still mesmerising.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. Hey Vicky,

    This page is outstanding. Hope you dont mind if i post it in my FB, so my friends who are die hard Raaja fans can experience what i went thro'.

    Thanks,
    Siddharth

    ReplyDelete